பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வருவேன்,பொறுத்திருந்து பாருங்கள்: ஓவியா

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 26, 2018 03:11 PM
Actress Oviya confirms that she will make a visit Biggboss show

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 தினங்களே இருப்பதால் வெற்றிவாகை சூடப்போகும் அந்த ஒரு நபர் யார்? என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால் வீட்டைவிட்டு வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து செல்கின்றனர். அந்தவகையில் இன்று யாஷிகா மற்றும் பாலாஜி இருவரும் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

 

பழைய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து செல்வதால் நடிகை ஓவியாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

 

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது குறித்து ஓவியா ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் உங்களைப் பார்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என ரசிகர் ஒருவர் கேட்க, பதிலுக்கு, ''ஆமாம். பொறுத்திருந்து பாருங்கள் சார்,'' என ஓவியா பதிலளித்துள்ளார்.