'ரா ரா'.. சந்திரமுகியாகவே உருமாறிய ரித்விகா.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 24, 2018 01:01 PM
Biggboss Tamil: September 24th Promo Video 1

யாஷிகா வெளியேற்றத்துக்குப் பின் வீட்டில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதனால் வைஷ்ணவி மற்றும் ரம்யா என வீட்டில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது வீட்டுக்குள் வந்துள்ளனர்.

 

இந்தநிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் சந்திரமுகி போல ரித்விகாவும், வேணாம் வலிக்குது என கைப்புள்ள வடிவேலு போல விஜியும் நடித்துக் காட்டுகின்றனர்.

 

மறுபுறம் ஐஸ் கீழே விழுந்து பயப்படுவது போலவும் காட்சிகள் உள்ளன. இதனால் பிக்பாஸ் ஏதேனும் டாஸ்க் கொடுத்துள்ளார் போல என யூகிக்க முடிகிறது.