திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த..பிக்பாஸ் போட்டியாளர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 23, 2018 08:20 PM
Biggboss contestant Dhadi Balaji met DMK Chief MK Stalin

பதினாறு போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கும் என ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

 

அந்தவகையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் ஒரே ஆணாக தாக்குப்பிடித்து வந்த பாலாஜி வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனது மனைவி நித்யா மற்றும் மகள் போஷிகாவுடன் அவர் ஒன்று சேர்ந்துள்ளார்.

 

இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று நேரில் தாடி பாலாஜி சந்தித்துள்ளார். கலைஞர் கருணாநிதி மறைந்த சமயம் பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருந்தார். அதனால் வீட்டைவிட்டு வெளியில் வந்தவுடன் ஸ்டாலினை நேரில் சந்தித்து கலைஞர் மறைவுக்கு தனது ஆறுதலையும், திமுக தலைவர் ஆனதுக்கு வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.