தமிழ்நாடு முழுவதும் இடி,மின்னலுடன் மழை பெய்யும்

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 23, 2018 07:01 PM
Tamil Nadu will get good Rains: Tamil Nadu Weatherman

தமிழகம் முழுவதும் இடி,மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:-

 

தமிழ்நாட்டின் மேற்கு,கிழக்கு மற்றும் தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு.இந்த மழை ஏறக்குறைய 1 மணி நேரம் பெய்யும் என எதிர்பார்க்கலாம்.

 

அதேபோல, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், திருப்பூர், ஊட்டி, திண்டுக்கல், கோவை, நாமக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

சென்னை மற்றும் வடதமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும். இடி,மின்னலுடன் மழை பெய்யும் போது மக்கள் உயரமான கட்டிடங்களில் ஏறி நிற்பதையும், மரத்தின் கீழும், இரும்பு தூணின் கீழும் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.