தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படுமா?... தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 26, 2018 05:54 PM
Floods won\'t happen in Tamil Nadu - Weatherman

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என, தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறி  இருப்பவதாவது;-

 

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அடுத்த 10 நாட்களுக்கு நாள்தோறும் இடியுடன் கூடிய மழையை சென்னை மற்றும் தமிழகத்தில் எதிர்பார்க்கலாம்.ஆனால், வெள்ளம் வருவதுபோல் மழை பெய்யாது. சென்னையில் இதுபோன்ற மழையால் வெள்ளமும் வராது. செங்கல்பட்டில் நேற்று 50மிமி மழை பெய்தது, இன்றும் மழை பெய்யக்கூடும்.

 

பெங்களூர்:

 

பெங்களூரிலும் அடுத்து வரும் நாட்களில் நாள்தோறும் நகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், வெள்ளம் வரும் அளவுக்குக் கனமழை இருக்காது.

 

கேரளா:

 

கேரளாவைப் பொறுத்தவரை மழை தற்போது அங்கு இடைவெளி கொடுத்துள்ளது. ஆனால், சில நேரங்களில், ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஆனால், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அளவுக்கு மிக கனமழை இருக்காது.