கேரள வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்த மத்திய அரசு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 20, 2018 06:52 PM
Central Govt Declared Kerala Floods, A National Disaster

கேரள மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏகப்பட்ட மக்கள் தங்கள் உறவுகள், உடைமைகள், இருப்பிடங்கள் அனைத்தையும் இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

20 ஆண்டுகளுக்குப் பின் ஏறக்குறைய கேரளா சந்திக்கும் மிகப்பெரிய பேரிடராக இந்த மழைக்காலம் அறிவிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியலாளர்களும் நடிகர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

தேசிய பேரிடர் மீட்பு படையினர் பலரும் வந்து கேரளாவில் தீவிர உழைப்புடன் அனைவரையும் காப்பாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் பலரது கோரிக்கையை ஏற்ற பின் கேரளாவின் இந்த வருட வெள்ள பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு.

Tags : #KERALAFLOOD #KERALA #RAIN #NATIONALDISASTERKERALA #CENTRALGOVT