கைக்கோர்த்த சீக்கியர்கள்..கேரள மக்களுக்காக உணவு சமைக்கும் கல்சா அமைப்பு !

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 18, 2018 11:14 PM
Khalsa joins relief operations in kerala serves food for homeless ppl

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து கடந்த 10 நாட்களாகப் பெய்து வருகிறது. இதுவரை மழை வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் சிக்கி 350 பேர் பலியாகியுள்ளனர். 3 லட்சம் மக்கள் சொத்துக்களையும், உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு உதவுதவதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆதரவுக் கரம் நீண்டு, நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்தச் சூழலில் பல்வேறு மாநில  மக்கள் கேரளாவுக்கு உதவுவதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றனர். சமூக வலைதளம் வாயிலாகப் பலர் தங்களால் முடிந்த உதவியைக் கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.

 


இந்நிலையில், கேரளாவில் பல்வேறு முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கு உணவு அளிக்கும் வகையில் சீக்கியர்களின் மிகப்பெரிய கல்சா அமைப்பு களத்தில் இறங்கியுள்ளது.

 

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீக்கியர்களின் சர்வதேச கல்சா உதவி மையத்தின் இந்தியக் கிளையைச் சேர்ந்தவர்கள் நேற்று கொச்சி நகர் வந்து சேர்ந்தனர். அவர்கள் கொச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்காக உணவு சமைத்து வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

 

சீக்கியர்களின் இலவச உணவு படைக்கும் லாங்கர் அடுப்பின் மூலம் உணவு சமைத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேடி வந்து உணவு சமைத்து உதவி வரும் சீக்கியர்களின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Tags : #KERALAFLOOD