'இனி எல்லாம் கடவுள் கையில தான் இருக்கு'.. வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 18, 2018 05:30 PM
KeralaFloods: Actress Ananya talks about her flood experience

கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கேரளாவில் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர்.வீடு,வாசல்களை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உட்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

 

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட அனுபவம் குறித்து, நடிகை அனன்யா தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து நடிகை அனன்யா தனது பேஸ்புக் பக்கத்தில், ''கடந்த 2 நாட்களாக நாங்கள் பட்ட துன்பத்தை சொல்ல முடியாது. எங்கள் வீடு முழுவதும் தண்ணீரில் மூழ்கிவிட்டது.தற்போது நடிகை ஆஷா சரத்தின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியவில்லை.

 

அனைத்தும் கடவுள் கைகளில் தான் உள்ளது.என்னுடைய  உறவினர்களின் வீடுகள் தண்ணீரில் மூழ்கி விட்டன. இன்னும் மழை பெய்துகொண்டு தான் இருக்கிறது. ஏராளமானோர் வீடுகளை இழந்து இருக்கிறார்கள். எங்களை வெள்ளத்தில் இருந்து மீட்ட அனைவருக்கும் நன்றி,'' என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.