கேரளாவுக்கு ரூ.25 லட்சம் 'நிதியுதவி' வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவிப்பு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 17, 2018 12:09 PM
Vijay Sethupathi to donate Rs 25 lakhs to Kerala

தொடர் கனமழையினால் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா வெள்ளத்தில் தொடர்ந்து தத்தளித்து வருகிறது. ஆங்காங்கே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.இதுவரை கனமழைக்கு 167 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் 94 வருடங்களுக்குப்பின் மிகப்பெரிய பேரிடரை கேரளா சந்தித்துள்ளது. தற்போது பேரிடரில் சிக்கியிருக்கும் கேரளாவுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிதியுதவிகள் குவிந்து வருகின்றன.

 

இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். முன்னதாக நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ 25 லட்சமும், சித்தார்த் ரூபாய் 10 லட்சமும்,விஷால் ரூபாய் 10 லட்சமும் உதவித்தொகையாக வழங்கியுள்ளனர்.தனுஷ் 15 லட்சம் ரூபாயும்,சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாயும் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

 

இதேபோல நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவியுடன் இணைந்து, ரூபாய் 50 லட்சம் நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.