நடிகை கடத்தல் வழக்கில் 'வீடியோ ஆதாரம்' கேட்ட நடிகர்.. நீதிமன்றம் நிராகரிப்பு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 14, 2018 11:57 PM
Actor Dileep\'s request for Actress abduction video rejected by HC

கடந்த ஆண்டு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக வீடியோ காட்சிகள் உள்ளன.

 

தொடர்ந்து காரில் எடுக்கப்பட்ட காட்சிகளின் உண்மைத்தன்மையை ஆராய வேண்டும் என,கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் திலீப் சார்பில் கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.இந்த மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்தநிலையில் மீண்டும் வீடியோ ஆதாரங்கள் கேட்டு திலீப் கோர்ட்டில் மனு அளித்தார். எனினும் மீண்டும் அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #KERALA #DILEEP