'சிம்பு எங்கள் தயாரிப்பில் நடிக்கிறார்'..அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்ட லைகா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 14, 2018 11:08 PM
Lyca Productions announces their next with Simbu

சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் 'செக்கச்சிவந்த வானம்' திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து கவுதம் மேனன்,வெங்கட்பிரபு படங்களில் அவர் நடிக்கவுள்ளார்.

 

இந்தநிலையில் தங்களது தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து லைகா தனது ட்விட்டர் பக்கத்தில், ''எங்களது நிறுவனத்துக்கு சுந்தர்.சி இயக்கவுள்ள படத்தில் சிம்பு நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு,2019-ம் ஆண்டு ஜனவரியில் படம் வெளியாகும்,'' என தெரிவித்துள்ளது.

 

2013-ம் ஆண்டு பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி சூப்பர்-டூப்பர் ஹிட்டடித்த அத்தாரின்டிக்கி தாரெடி படத்தின் ரீமேக்காக இப்படம் இருக்கும் என்றும் மேகா ஆகாஷை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #SIMBU #SUNDARC