Looks like you've blocked notifications!

தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள விடுதி என்ற கிராமத்தில் இருந்த பெரியாரின் முழு உருவச்சிலையின் தலை, நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது.

 

தொடர்ந்து, சிலையை உடைத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்ப்புகள் வலுத்தநிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

விசாரணையில், சிலையை உடைத்தவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றிவரும் செந்தில்குமார் என்பது தெரியவந்துள்ளது. இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது, குடிபோதையில் சிலையை உடைத்தாகக் கூறப்படுகிறது.

BY SATHEESH | MAR 21, 2018 9:46 AM #PERIYAR #தமிழ் NEWS

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள விடுதி என்ற கிராமத்தில் இருந்த பெரியாரின் முழு உருவச்சிலையின் தலை, நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

 

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த சிலை உடைப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடைய மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

அதில், "பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, தன்மானமுள்ள தமிழினத்தின் அடையாளம்! ஒன்றை உடைத்தால் ஆயிரமாய், இலட்சமாய் முளைத்து எழுவார்கள்!

 

உடைத்தெறிய உனக்கு வலுவிருந்தால், இறுதியாய் நாள்,நேரம்,இடம் குறித்து விட்டு வா! உன்னை சந்திக்க பெரியாரின் பேரப்பிள்ளைகள் நாங்கள் தயார்!", என குறிப்பிட்டுள்ளார்.

BY SATHEESH | MAR 20, 2018 5:37 PM #PERIYAR #UDHAYANIDHI STALIN #தமிழ் NEWS

இன்று காலை உடல்நலக்குறைவால் காலமான, சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான, ம.நடராஜன் குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் பிரபல திரைப்பட இயக்குனர் பாரதிராஜா.

 

அந்த இரங்கல் செய்திக்குறிப்பில், மறைந்த ம.நடராஜன் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவர்களுக்கு வலுசேர்த்தவர் என்றும், அவர் நினைத்திருந்தால் அரசியலில் உச்சத்திற்கு வந்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

 

மேலும், ம.நடராஜனின் வழிகாட்டுதலில் தான் முப்பது ஆண்டு காலமாகத் தமிழ்நாடு இயங்கியது எனவும், அவருடைய இறப்பு தன் ஆணிவேரையே அசைத்து விட்டதாகவும், பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

BY SATHEESH | MAR 20, 2018 4:25 PM #MNATARAJAN #BHARATHIRAJA #தமிழ் NEWS

தன் ஆன்மீக சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

 

அப்போது, தன்னுடைய மனம் ஆன்மீக சுற்றுப்பயணத்திற்குப் பின்பு நிம்மதியாக, புத்துணர்ச்சியாக இருப்பதாகவும், புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனம் என்றும்  தெரிவித்துள்ளார்.

 

மேலும், தன் பின்னால் பாஜக இல்லை என்றும், தன் பின்னால் கடவுளும் மக்களும் மட்டும் தான் இருப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

BY SATHEESH | MAR 20, 2018 3:28 PM #RAJINIKANTH #தமிழ் NEWS

சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான, ம.நடராஜன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

இதனையடுத்து, சசிகலாவின் வேண்டுகோளை ஏற்ற பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாகம், தனது கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள, 15 நாட்கள் பரோலில் வெளியே செல்ல சசிகலாவுக்கு  அனுமதி வழங்கியுள்ளது.

 

இதனையடுத்து, சிறையிலிருந்து வெளியே வரும் சசிகலா, நடராஜனின் இறுதி சடங்கு நடைபெறவிருக்கும் தஞ்சாவூருக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை, போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கிய, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் ராமராஜ்ஜிய ரத யாத்திரை, இன்று திருநெல்வேலி வழியாக தமிழகம் வந்தது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்ற சீமானை, போலீசார் கைது செய்துள்ளனர்.

 

முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்  ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

BY SATHEESH | MAR 20, 2018 11:31 AM #SEEMAN #தமிழ் NEWS

கடந்த ஞாயிறு அன்று, நடைபெற்ற நிதாஹஸ் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச  அணியுடன் மோதிய இந்தியா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

 

நிதாஹஸ் தொடர் முழுவதுமே வங்காளதேச  அணியினரின் பாம்பு நடனம், தமிழக வீரர்கள் தமிழில் பேசியது, தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் இந்தியா கோப்பையை வென்றது என பரபரப்பாக இருந்தது.

 

இதுகுறித்து நாம் சென்னையில் ரசிகர்களிடம் கருத்து கேட்க, அவர்கள் பல துள்ளலான கருத்துக்களையும் அற்புதமான பாம்பு நடனத்தையும் நமக்காக அளித்தனர்.

 

அதனை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து காணவும்.

BY SATHEESH | MAR 20, 2018 11:08 AM #CHENNAI #தமிழ் NEWS

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை, போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கிய, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் ராமராஜ்ஜிய ரத யாத்திரை, திருநெல்வேலி வழியாக தமிழகம் வருகிறது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற திருமாவளவனை, மதுரை அருகே பாறைப்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியருமான, ம.நடராஜன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

நடராஜின் பூதவுடல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் அஞ்சலிக்காக, பெசன்ட் நகரிலுள்ள அவரது வீட்டில்  வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இன்று காலை 11 மணியளவில் நல்லடக்கத்திற்காக நடராஜனின் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு, அவருடைய பூதவுடல் எடுத்து செல்லப்படவுள்ளது.

BY SATHEESH | MAR 20, 2018 8:51 AM #VKSASIKALA #MNATARAJAN #தமிழ் NEWS

சைவத்திலிருந்து தோன்றிய ஒரு சமயப் பிரிவான லிங்காயத்துகள், தங்களை தனிமதமாக,  சிறுபான்மையினராக அங்கீகரிக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று, லிங்காயத்துகளை தனி மதமாக கர்நாடக அரசு அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது.

 

லிங்காயத்துகளை தனிமதமாக அங்கீகரிப்பது குறித்து பரிசீலிக்க, நீதிபதி நக்மோகன் தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு லிங்காயத்துகளை தனிமதமாக அங்கீகரிக்கலாம் என பரிந்துரைத்தது.

 

இதனையடுத்து, லிங்காயத்துகளை தனிமதமாக அங்கீகரிப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கவும் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு பரிந்துரைக்க உள்ளது.

BY SATHEESH | MAR 19, 2018 5:09 PM #KARNATAKA #LINGAYAT #தமிழ் NEWS

ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த சண்முகப் பிரியா, இன்று காலை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய கணவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

 

வீட்டின் அருகே கழுத்து அறுபட்ட நிலையில் சண்முகப் பிரியாவை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல்  தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் சண்முகப் பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.மேலும், சண்முகப் பிரியாவின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியும் திருடப்பட்டுள்ளது. சண்முகப் பிரியாவின் கணவர் மோகன்ராஜா மீது சந்தேகமுற்ற போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற நிதாஹஸ் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணியுடன் மோதிய இந்தியா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

 

இதுகுறித்து, இன்று ட்விட்டரில் பதிவிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா வென்றது மட்டுமில்லை, மேலும் ஒரு சிறந்த தருணமும் நேற்று நடந்தது என தெரிவித்துள்ளார்.

 

அதில் இலங்கை ரசிகர் ஒருவர், இந்திய ரசிகரை அன்பின் மிகுதியால் தூக்கி வைத்துள்ள புகைப்படத்தை பதிவேற்றி நெகிழ்ந்துள்ளார்.

 


 

BY SATHEESH | MAR 19, 2018 3:06 PM #CRICKET #NIDAHASTROPHY #தமிழ் NEWS

மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் உடலில் தேசியக்கொடியை போர்த்தியது தவறு, என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.

 

மும்பையில் நடைபெற்ற பேரணியில் பேசிய ராஜ் தாக்கரே, "நீரவ் மோடியை பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீ தேவியின் மரணம் எல்லாவற்றையும் மாற்றியது.

 

பத்மஸ்ரீ விருது பெற்றார் என்ற காரணத்திற்காக ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தியதாகக்   கூறுகிறார்கள். இது மகாராஷ்டிரா அரசாங்கம் செய்த பெரிய தவறு", என்று தெரிவித்தார்.

BY SATHEESH | MAR 19, 2018 2:00 PM #SRIDEVI #RAJTHACKERAY #தமிழ் NEWS

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவரபெட்டா கிராமத்தைச் சேர்ந்த சங்கரப்பா (35) குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில், தனது தம்பி கணேஷ்-ஐ (28) நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

 

யுகாதி பண்டிகை கொண்டாட்டத்திற்காக ஒன்றாக மது அருந்தும்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் சங்கரப்பா தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து, கணேஷ்-ஐ சுட்டுள்ளார்.

 

இதில், சம்பவ இடத்திலேயே கணேஷ் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார், கணேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

BY SATHEESH | MAR 19, 2018 12:31 PM #TAMILNADU #தமிழ் NEWS

நேற்று இரவு, சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு போன் செய்த மர்ம நபர்கள், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தனர்.

 

இதனையடுத்து, வெடிகுண்டை செயலிழக்கும் கருவிகள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையம் முழுவதும் போலீசார் சோதனை செய்தனர். இறுதியில், வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி, புரளி என தெரியவந்தது.

 

தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கரணையைச் சேர்ந்த சக்தி சரவணன் மற்றும் தீபானந்த் என தெரிய வந்தது.

 

இருவரையும் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

BY SATHEESH | MAR 19, 2018 11:31 AM #CHENNAIAIRPORT #தமிழ் NEWS

சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சசிகலாவின் கணவர் நடராஜனை நேரில் சந்தித்த பின்னர், டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

 

அப்போது, முன்பு இருந்ததை காட்டிலும், தற்போது நடராஜனின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், நடராஜனின் உடல்நிலை காரணமாக, சசிகலாவுக்கு பரோல் விடுப்பு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தினகரன் கூறினார்.

நேற்று நடைபெற்ற நிதாஹஸ் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச  அணியுடன் மோதிய இந்தியா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

 

வெற்றிக்கு பிறகு பேசிய தினேஷ் கார்த்திக்,"பேட்டிங் செய்ய சுலபமாக இல்லை. நான் அதிரடியாக ஆட வேண்டிய நிலையில் இருந்தேன். ஏற்கனவே  நான் பந்து வரும் திசையிலேயே அடிப்பதற்கான  கடுமையாகப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தேன்.

 

அந்த பயிற்சி அதிர்ஷ்டவசமாக இன்று கைகொடுத்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம், அந்த வாய்ப்பை நழுவவிட்டு விடக் கூடாது. இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி", என்று கூறினார்.

BY SATHEESH | MAR 19, 2018 10:17 AM #CRICKET #தமிழ் NEWS

இன்று டிடிவி தினகரன் அணியில் விலகுவதாக அறிவித்த நாஞ்சில் சம்பத், தான் அரசியலில் இருந்தே  விலகுவதாகவும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, "நாஞ்சில் சம்பத் பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தில் திராவிட இயக்க உணர்வோடு வளர்ந்தவர்.

 

அவர் ஒரு தலை சிறந்த இலக்கிய சொற்பொழிவாளர். அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார்", என்றார்.

BY SATHEESH | MAR 17, 2018 10:58 PM #VAIKO #தமிழ் NEWS

தெலுங்கானா மாநிலம், மண்சேரியல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவன் இரண்டு கைகளும் இல்லாததால், தனது காலினால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

ஆறாவது வகுப்பு பயிலும்போது ஏற்பட்ட மின்சார விபத்தில் தன் இரண்டு கைகளையும் இழந்த எல்லூரி சங்கர், தனது காலினால் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவருகிறார்.

 

இது குறித்து, சங்கர் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம்  பேசியபோது, மின்சார விபத்திற்குப் பின் கால்களால் எழுத பழகிக்கொண்ட சங்கர், தன் சார்பாக தேர்வு எழுத தனி எழுத்தருக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை என்றார்.

BY SATHEESH | MAR 17, 2018 9:44 PM #TELANGANA #தமிழ் NEWS

சென்னை வடபழனியில் உள்ள தனியார் செல்போன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வரும் ஊர்மில் டோலியா (43), தன் மகனை கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

தன் மகன் மாதவ் டோலியாவை (7) ஷாப்பிங்கிற்கு அழைத்து செல்வதாக, வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற ஊர்மில் டோலியா, தான் பணிபுரியும் கடைக்கு கூட்டிச் சென்றுள்ளார்.

 

கடைக்குச் சென்ற பின் தன் மகனின் கையை அறுத்த ஊர்மில் டோலியா தனது கையையும் அறுத்துள்ளார். ரத்தம் வெளியேறியதால் மகன் மாதவ் டோலியா துடிதுடித்து இறக்க, அவரது தந்தை மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People