'செக்கச்சிவந்த வானம்' படத்தின் 'வெளியீட்டு' தேதி இதுதான்!

Home > News Shots > தமிழ்

By |
Chekka Chivantha Vaanam to release on September 28

விஜய் சேதுபதி,அருண் விஜய்,சிம்பு,அரவிந்த் சாமி,ஜோதிகா,அதிதி ராவ் ஹைதாரி,ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் செக்கச்சிவந்த வானம்.

 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளதால்,இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர்.

 

இந்தநிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியினை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 28-ம் தேதி இப்படம் வெளியாகும் என, லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

Tags : #VIJAYSETHUPATHI #SIMBU #CCV