All
Looks like you've blocked notifications!

'காலா' , '2.0' படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளராக அனிருத் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 

எனினும் சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்கப்போவது யார்? என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த சஸ்பென்ஸ் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

 

ஆமாம். சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக இப்படத்தில் நடிக்கவிருப்பது, கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான நாயகன் விஜய் சேதுபதி தான். 

 

இதனையறிந்த ரசிகர்கள்,  தற்போது சமூக வலைதளங்களில் தங்களது உற்சாகத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' என கார்த்திக் சுப்புராஜின் முந்தைய 3 படங்களிலும் விஜய் சேதுபதி, நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People