All
Looks like you've blocked notifications!

பிக்பாஸ் புகழ் ஓவியா தற்போது 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை காதலர் தினமான நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.

 

குளிர் 100° பட இயக்குநர் அனிதா உதீப் இயக்கும் இப்படத்துக்கு '90 எம்.எல்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கையில் டீ, பன்னுடன் கால்மேல் கால்போட்டு ஓவியா அமர்ந்திருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக், ஓவியா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

இப்படத்துக்கு இசையமைப்பாளராக நடிகர் சிம்புவும், ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

BY MANJULA | FEB 15, 2018 10:50 AM #OVIYA #SIMBU #ஓவியா #சிம்பு #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People