தத்தளிக்கும் கேரளா.. தமிழக அரசு 5 கோடி நிதியுதவி!

Home > News Shots > தமிழ்

By |
TamilNadu Donates Money to Kerala for flood relief

26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட இடுக்கி அணை நிரம்பி வழியும் கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் தத்தம் உடமைகளை இழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையும், ராணுவ மேலாண்மை ஆணையத்தின் வீரர்களும் களத்தில் இறங்கி தத்தளிக்கும் கேரளாவை மீட்டெடுத்துக்கொண்டு வருகின்றனர். மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மக்களுக்கு உதவி வருகின்றன. 

 

இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு ரூ. 5 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய முதலமைச்சர் பழனிசாமி, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, கேரளாவில் கனமழையால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், மேலும் கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். 

 

அதுமட்டுமல்லாது, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்  என்றும் கூறியவர், 5 கோடி ரூபாயை நிதியாக அளிக்கப்படு விபரத்தை வெளியிட்டார்.

Tags : #EDAPPADIKPALANISWAMI #KERALA #DISASTER #KERALADISASTER