அணை பாதுகாப்பில்லாமல் இருப்பதாக கற்பனையில் கூறாதீர்கள்..முல்லைப் பெரியார் வழக்கில் நீதிபதிகள் கண்டனம் !

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 16, 2018 04:34 PM
Kerala flood sc asks officials to try to reduce mullaperiyar water

முல்லைப் பெரியார் அணையின் நீர் மட்டத்தை குறைக்ககோரி இடுக்கி பகுதியை சேர்ந்த ரசுல் ஜாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது.

 

இடுக்கி மாவட்ட மக்கள் பயத்துடனே வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அணை நீரை திறந்துவிடுவதில் தமிழக அதிகாரிகள் மெத்தனம் காட்டுகிறார்கள் என்று மனுதாரர் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

 

இதற்கு நீதிபதிகள் முல்லைப் பெரியார் அணை பாதுகாப்பில்லாமல் இருப்பதாக கற்பனையில் கூறாதீர்கள். சரியான ஆதாரங்களுடன் வாதங்களை முன்வையுங்கள் என்று கண்டிப்புடன் தெரிவித்தார்கள். மேலும்  நீர்மட்டத்தை குறைத்தால் நிலைமையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாடை தெரிவித்தது.

 

இதனை தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் சில நாட்களுக்கு அணையின் நீர் மட்டத்தை 138 அடிக்கு குறைவாக குறைக்க முடியுமா?  என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

 

மேலும் அணையின் நிலவரம், தண்ணீர் திறப்பு, இயற்கை பேரிடர் நடவடிக்கைகள் குறித்து நாளை விரிவான அறிக்கை தர துணைக் கண்காணிப்பு குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இது தொடர்பாக நாளைக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கூறி வழக்கை நாளைக்கு  ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.