35 அடி பாலம் கட்டி 100 பேர் மீட்பு.. உயிரை பணயம் வைத்த இராணுவ வீரர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 16, 2018 02:54 PM
Army built 35-feet long bridge to rescue people in kerala

கேரளாவில் கடந்த சில தினங்களாக பொழியும் கனமழை காரணமாக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது கேரளா. இடுக்கி அணை திறந்துவிடப்பட்டதால், வீடுகள்-உடமைகள் நாசமாயின. பலர் உயிரிழந்துமுள்ளனர். 

 

இதனை அடுத்து, கேரள முதல்வர் தமிழக முதலமைச்சருக்கு, முல்லைப் பெரியாறு அணையைத் திறந்துவிடச் சொல்லி கடிதம் எழுதினார். அதற்கு பதில் அளித்த முதல்வர், ‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார். 

 

அதே சமயத்தில் தமிழகத்தில் டெல்டா மற்றும் கொங்கு மண்டலங்களில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், கேரளாவில் மலப்புழா அருகே வெள்ளநீருக்கு நடுவே 35 அடிக்கு, நீண்டதொரு பாலத்தை கட்டி 100 பேரை வெள்ளத்திலிருந்து கேரளாவில் குவிந்துள்ள தேசிய பேரிடர் கால ராணுவப்படை மீட்டிருக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.