'கையில் கட்டுடன்'... களத்தில் இறங்கிய அமலாபால்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 18, 2018 02:27 PM
Actress Amala Paul Participating Kerala Flood Relief work

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து கேரளாவை மூழ்கச்செய்துள்ளது. இதனால் அம்மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர். ஒருபுறம் முப்படைகளும் களத்தில் இறங்கி இரவு-பகல் பாராமல் மக்களைக் காப்பாற்றி வருகின்றனர்.மறுபுறம் பல்வேறு தரப்பு மக்களும் கைகோர்த்து கேரள மக்களுக்கு உதவி வருகின்றனர்.

 

இந்த நிலையில் தனது மாநில மக்களுக்கு உதவ கையில் கட்டோடு நடிகை அமலாபால் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் நடந்த விபத்தில் அவரது ஒரு கையில் அடிபட்டு கட்டு போடப்பட்டுள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் தானே நேரடியாக கடைக்கு சென்று பொருட்களை வாங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் உதவி வருகிறார்.

 

கையில் கட்டுடன் அமலாபால் உதவி செய்யும் புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Tags : #KERALAFLOOD #AMALAPAUL