கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் !

Home > News Shots > தமிழ்

By Jeno | Aug 18, 2018 08:39 PM
TN IAS officers giving hands to kerala floods - one day salary

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவுக்குக் கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களுமே வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுவதால் மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து முகாம்களில் தங்கி வருகின்றனர். மீட்புப் பணிகளில் முப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

 

இந்தச் சூழலில் தமிழக மக்கள் கேரளாவுக்கு உதவுவதில் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றனர். சமூக வலைதளம் வாயிலாகப் பலர் தங்களால் முடிந்த உதவியைக் கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தைப் நிவாரணத்துக்காக வழங்க முன்வந்துள்ளனர். 

 

இந்நிலையில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் ஒருநாள் சம்பளத்தை வெள்ள நிவாரணத்திற்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

 

இது குறித்து தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்க தலைவர் டேவிடார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "“தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த அசாதாரண சூழ்நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக தங்களின் ஒரு நாள் சம்பளத்தை கேரள அரசின் நிவாரண நிதிக்கு  வழங்க உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #KERALAFLOOD #IAS OFFICERS