'கெத்தா ஒரு ஊரு மெட்ராஸ் சிட்டின்னு பேரு'.. சென்னை(யை) தமிழில் வாழ்த்திய பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 22, 2018 06:02 PM
Harbhajan Singh wishes on Madras Day

வந்தாரை வாழ வைக்கும் சென்னை இன்று தனது 379-வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி பலரும் சென்னை குறித்த தங்களது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும், சென்னைக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 


கல கல னு ஊரு கெத்தா மெட்ராஸ் சிட்டி னு பேரு
பரபரப்ப பாரு இங்க மக்கள் கூட்டம் ஜோரு
ஐபில் னு அந்த பக்கம் வந்தோம் ஒரு நாளு அது செம தாறு மாறு
என்னைக்கும் எங்களுக்கு சென்னை ஒரு தாய் வீடு தான்
இன்னக்கி ஊருக்கு 379வது பிறந்தநாள்
வாழ்த்துக்கள் சொல்லிக்குறேன்

 


இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், போட்டி நிலவரங்களை தொடர்ந்து தமிழில் ட்வீட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #VADACHENNAI #HARBHAJANSINGH #MADRASDAY