மும்பை அணிக்கு எதிராக விளையாடுவது எத்தகையது? ஹர்பஜன் பதில்!
Home > News Shots > தமிழ்By Satheesh | Apr 05, 2018 05:04 PM

நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டி தொடரின் முதல்போட்டியில், நாளை மறுநாள் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது.
நடந்த முடிந்த 10 ஐபிஎல் தொடர்களிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் முதன்முதலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளார்.
இதுகுறித்து, பயிற்சியின் நடுவே செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், "கடந்த 10 ஐபிஎல் தொடர்களிலும் வான்கடே மைதானம் என் தாய் மைதானமாக இருந்தது.
அந்த மைதானத்தில், நான் ஏற்கனவே ஆடிய மும்பை அணிக்கு எதிராக விளையாடவுள்ளது உணர்ச்சி ததும்பும் வகையில் உள்ளது. ஆனால் தொழில்பூர்வமான ஒரு வீரராக நான் இவை எல்லாவற்றையும் கடந்து விளையாட்டில் கவனம் செலுத்துவேன்.
10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருப்பதால், அந்த அணியை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் மும்பை அணியை வீழ்த்த அவசியமானது, சிறப்பாக விளையாடுவது மட்டுமே. அதனை செயல்படுத்த எங்கள் அணியிடம் வீரர்கள் இருக்கிறார்கள்," என தெரிவித்தார்.


RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS
