சென்னையில் 'கனமழை' தொடருமா?.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 15, 2018 12:34 AM
Will Chennai Rain to be continued?.. Details Here!

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மாலை தொடங்கி கனமழை பெய்து வருகிறது.இது ஒருபுறம் சென்னையின் வெம்மையைக் குறைத்தாலும், மறுபுறம் தொடர்மழை காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் சென்னையில் மழை தொடருமா? என்ற கேள்விக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,''வெப்பச்சலனக்காற்று காரணமாக சென்னையில் இன்றும், நாளையும் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புண்டு. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் சில மணிநேர இடைவெளிவிட்டு மாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும்,'' என தெரிவித்துள்ளார்.

Tags : #VADACHENNAI #RAIN #CHENNAI