அடுத்த '2 நாட்களுக்கு' மழை நீடிக்கும்: சென்னை வானிலை மையம்

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 24, 2018 11:04 AM
Rain extend another 2 days: Chennai Weather rain Centre

சென்னையில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

 

இந்த நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், ''வட தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தென் தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியும் உருவாகி உள்ளது. இதனால் வடதமிழகம்- தென் தமிழகத்தில் இன்று காலை முதல் மழை பெய்தது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும்.

 

தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழைபெய்து வருகிறது. இங்கு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.

 

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாவதற்கான வாய்ப்பு நிலவுவதால் வருகிற 26-ம் தேதி கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடல் சீற்றமும் அதிகம் காணப்படும்,'' என தெரிவித்தனர்.