பிக்பாஸ் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்?.. விவரம் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 18, 2018 08:34 PM
Biggboss Tamil Telecast time changed from September 24th

 தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படவுள்ளது.

 

கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 90 நாட்களைக் கடந்த நிலையில் தற்போது விஜி, பாலாஜி, ரித்து, ஐஸ், யாஷிகா மற்றும் ஜனனி என மொத்தம் 6 போட்டியாளர்கள் உள்ளனர்.

 

100 நாட்களுக்குப் பதிலாக மேலும் 5 நாட்கள் நீடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளது. இதனை நமது தளத்திலும் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

 

இந்தநிலையில் வரும் செப்டம்பர் 24-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு 'அரண்மனைக்கிளி' என்னும் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரம் மாற்றப்படுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. தற்போது இதுகுறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி செப்டம்பர் 24-ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.