இந்த வாரம் வெளியேறியது இவரா?...கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Behindwoods News Bureau | Sep 15, 2018 07:12 PM
Biggboss Tamil: Who is Eliminated this week? Read Here!

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஐஸ்வர்யா,விஜயலட்சுமி,ரித்விகா மற்றும் மும்தாஜ் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். நால்வரும் முக்கியமான போட்டியாளர்கள் என்பதால், இவர்களில் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப் போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

 

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மும்தாஜ் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலிருந்து நாமினேட் செய்யப்பட்டு, ஒவ்வொரு வாரமும் அவரது ரசிகர்களால் தொடர்ந்து மும்தாஜ் காப்பாற்றப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் ரசிகர்கள் அளித்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ரித்விகா முதல் இடத்தையும், விஜயலட்சுமி 2-வது இடத்தையும் பிடித்திருப்பதாக, ஐஸ்வர்யா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.