பிக்பாஸுக்கு டிஆர்பி வேண்டுமென்றால்...ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும்

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 13, 2018 08:01 PM
Actress Kajal Pasupathi tweet about Biggboss Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமாக விமர்சிக்கப்படும் நபராக ஐஸ்வர்யா இருக்கிறார். இவர் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

 

இந்தநிலையில் பிக்பாஸுக்கு டிஆர்பி வேண்டும் என்றால் ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும் என, முதல் சீசன் போட்டியாளர் காஜல் பசுபதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காஜல், ''கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மட்டுமே.

 

அவர் என்ன பேசவேண்டும் என்று நிகழ்ச்சியின் இயக்குநர் தான் முடிவு செய்கிறார். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் டிஆர்பி வேண்டும் என்றால் ஐஸ்வர்யா உள்ளே இருக்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.