நெல்லை: மனைவிக்கும், 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் தற்கொலை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 13, 2018 06:36 PM
Man Kills himself With his Wife, 2 Childs at Tirunelveli, Tirupur

திருப்பூரில் வேலை செய்து வருபவர் மகேந்திரன். இவரது மனைவி ரேவதி, மகன் கதிர்வேல், மகள் அஸ்மிதா மூவரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர், ரேவதியின் அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளனர். நெல்லையில் உள்ள அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் கஸ்பா கிராமத்தில்  இருக்கும் அந்த வீட்டில் தன் அஸ்மிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடிய இக்குடும்பம் அதையே அந்த மழலையின் இறந்த நாளாகவும் மாற்றிவிட்டது.


ஆம், மகேந்திரன் தன் 2 குழந்தைகள் மற்றும் மனைவிக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும்  தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறை விசாரித்ததில் முன்னதாக  மஞ்சள் காமாலை நோய்த்தொற்றால் அவதிப்பட்டு வந்த மகேந்திரன்,   நோயின் தாக்கம் தாங்கமுடியாமல் தன் மகன், மகள் மற்றும் மனைவிக்கு பாலில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #SUICIDE #CRIME #TIRUPUR #NELLAI