ஐஸ்வர்யாவை 'சப்போர்ட்' செய்த ஓவியா.. அடித்துக்கொள்ளும் நெட்டிசன்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 12, 2018 08:19 PM
Biggboss Tamil: Oviya Supports Aishwarya Dutta? Read Here!

பிக்பாஸ் வீட்டில் ரசிகர்கள் வெறுக்கும் ஒரு நபராக ஐஸ்வர்யா இருக்கிறார். மேலும் ஐஸை பிக்பாஸ் தொடர்ந்து காப்பாற்றி வருவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த வாரம் ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

 

மாறாக சென்றாயன் வெளியே அனுப்பப்பட்டார். இதைத்தொடர்ந்து இந்த வாரமும் ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனால் கண்டிப்பாக இந்த வாரம் அவர் வெளியே அனுப்பப்படுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

 

இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்ற ஓவியா இன்று தனது டவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா, என பதிவிட்டுள்ளார்.

 

வேறு எதுவும் சொல்லாமல் வெறுமனே ஐஸ்வர்யா பெயரை மட்டும் அவர் பதிவு செய்துள்ளதால், அவர் எதற்காக இப்படி செய்தார்? என்பது தெரியவில்லை. இதனால் ஐஸ்வர்யாவை, ஓவியா ஆதரிப்பதாக ஒரு தரப்பினரும், அவர் பிக்பாஸ் சொல்லி இப்படி செய்துள்ளதாக மற்றொரு தரப்பினரும் காரசாரமாக விவாதம் செய்து வருகின்றனர்.

 

இதுதவிர தமிழ்ப்பெண் ஒருவர் டைட்டிலை வெல்லக்கூடாதா? எனவும் கேள்வி கேட்டு, ஓவியாவை விமர்சனம் செய்து வருகின்றனர்.