ஐஸ்வர்யாவை நல்லவராக காண்பிக்க.. கமல் சாரை டேமேஜ் செய்யக்கூட தயங்க மாட்டார்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 14, 2018 05:32 PM
They don\'t care to damage KamalHaasan sir: Thiru

பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளராக விஜயலட்சுமி சென்றுள்ளார். உள்ளே வெகு நாட்களாக இருக்கும் போட்டியாளர்களுக்கு இருக்கும் ஆதரவு, விஜயலட்சுமிக்கும் கிடைத்துள்ளது.

 

இந்தநிலையில் இயக்குநர் திரு தனது டிவிட்டர் பக்கத்தில்,'' ஐஸ்வர்யாவை நல்லவராகக் காண்பிக்க, கமல் சாரை டேமேஜ் செய்யக்கூட தயங்க மாட்டார்கள்,'' என தெரிவித்துள்ளார். 

 

ஐஸ்வர்யா, சென்றாயனை பொய் சொல்லி ஏமாற்றினார் என கமல் கடந்தவாரம் ஐஸ்வர்யாவிடம் கடுமை காட்டினார். இது தொடர்பாக பிக்பாஸ் நேற்று குறும்படம் ஒன்றை போட்டுக்காட்ட, அதில் ஐஸ்வர்யா பொய் சொல்லவில்லை என்பது தெரியவந்தது.

 

இதுகுறித்து திரு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தாரா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என்பது தெரியவில்லை.