'திடீரென மயங்கி சரியும் யாஷிகா'.. பதறிப்போகும் பிக்பாஸ்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 14, 2018 12:12 PM
Biggboss Tamil: September 14th Promo Video 2

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் யாஷிகா டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் கலந்து கொள்வது போல காட்சிகள் இருந்தன. தொடர்ந்து அதில் வெற்றி பெற்றதாகவும் பிக்பாஸ் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தார்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் யாஷிகா திடீரென மயங்கி சரிவது போலவும், அவரைக்கண்டு சக போட்டியாளர்கள் திகைப்பது போலவும் காட்சிகள் உள்ளன.

 

தொடர்ந்து யாஷிகாவை கன்பெக்ஷன் ரூமுக்கு அழைச்சிட்டு வாங்க என பிக்பாஸ் சொல்ல, அவரைக் கைத்தாங்கலாக மற்றவர்கள் கூட்டிச்செல்வது போல காட்டப்படுகிறது.

 

இதுவரை நடைபெற்ற அனைத்து பிக்பாஸ்  டாஸ்க்குகளிலும் யாஷிகா மிக ஆர்வமுடன் கலந்து கொண்டவர்.தவிர மற்றவர்களை போல உடல்நிலையை அவர் ஒருபோதும் காரணம் காட்டியது இல்லை என்பதால், யாஷிகா மயங்கி விழுந்தது சற்று அதிர்ச்சியாக உள்ளது. 

 

அவருக்கு என்ன ஆனது? என்பது இன்றிரவு நிகழ்ச்சியில் தான் தெரியவரும். அதுவரை காத்திருப்போம்..