மொத்த போட்டியாளர்கள் அனைவரையும்...ஒட்டுமொத்தமாக நாமினேட் செய்த பிக்பாஸ்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 17, 2018 10:46 AM
Biggboss Tamil: September 17th Promo Video 1

நேற்று பிக்பாஸ் வீட்டைவிட்டு மும்தாஜ் வெளியே சென்றார். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களும் வீட்டைவிட்டு வெளியேறினர்.

 

இந்தநிலையில் இன்று காலை வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, நீங்கள் பல்வேறு சவால்களைக் கடந்து பினாலே வாரத்திற்கு செல்ல பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக டாஸ்க்குகள் அளிக்கப்படும்.அனைவரும் இந்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யப்படுகிறீர்கள் என்று தெரிவிக்கிறார்.

 

இந்த வாரம் ஐஸ்வர்யா, யாஷிகா, ஜனனி, விஜயலட்சுமி,ரித்விகா மற்றும் பாலாஜி என 6 போட்டியாளர்களும் நேரடியாக நாமினேஷனுக்கு வந்துள்ளனர்.இதனால் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யாராக இருக்கும் என்பதைக் கணிப்பது சற்று கடினம்தான்...