இதெல்லாம் ஒரு காரணமா?..இழப்பு பிக்பாஸுக்கு தான் உனக்கில்லை டார்லிங்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 16, 2018 10:05 PM
It\'s Biggboss 2 loss not yours darling: Actress Harathi

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மும்தாஜ் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் வெளியேற்றப்பட்டார்.இதுகுறித்து சமூக வலைதளங்களில் மும்தாஜுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்தநிலையில் நடிகையும்,முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஆர்த்தி இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்,'' கடின உழைப்பு, நேர்மை, இளகிய மனது, அமைதியானவர்,'' என மும்தாஜை புகழ்ந்துள்ளார். மேலும்,''உங்களுக்கு மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன். இழப்பு பிக்பாஸுக்கு தான் உனக்கில்லை டார்லிங்,'' என தெரிவித்திருக்கிறார்.

 

மற்றொரு ட்வீட்டில்,'' எவிக்சனுக்கு இதெல்லாம் ஒரு காரணமா? முதல் நாளில் இருந்து இந்த நாள்வரை நீங்கள் ஒரு சிங்கமாக இருந்தீர்கள்.மற்றவர்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள்.உங்கள் ஆர்மியினருக்கு இது ஒரு பெருமையான தருணமாக இருக்கும்,'' என தெரிவித்துள்ளார்.