நேரான மரத்தைத் தான் முதலில் வெட்டுவார்கள்... மும்தாஜை சப்போர்ட் செய்த பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 17, 2018 04:49 PM
Serial actress Rachitha talks about Mumtaj\'s eviction

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் மும்தாஜ் அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியேற்றப்பட்டார்.இதுகுறித்து சமூக வலைதளங்களில் மும்தாஜுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்தநிலையில் சரவணன் மீனாட்சி புகழ் நடிகை ரக்ஷிதா, மும்தாஜுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,''நேரான மரத்தைத்தான் முதலில் வெட்டுவார்கள். பிக்பாஸ் மட்டுமல்ல எல்லா இடத்திலும் அப்படித்தான் நடக்கிறது.

 

புரிந்து கொள்ளாதவர்களுக்கு மத்தியில் இருப்பதை விட, வெளியே வந்து பாருங்கள். உங்களுக்காக நிறைய ரசிகர்கள் இங்கே உள்ளனர்.நீங்கள் ஏற்கனவே வென்று விட்டீர்கள். லவ் யூ,'' என தெரிவித்துள்ளார்.