'என்னோட தகுதி இதுதான்'.. உங்க லைஃப் வேற என் லைஃப் வேற!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 19, 2018 01:36 PM
Biggboss Tamil: September 19th Promo Video 3

இன்று வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் 1,2,3,4,5,6 என நம்பர் அடங்கிய மேடை வைக்கப்பட்டுள்ளது. இதில் நம்பர் 1 இடத்தில் நிற்பது யார்? என ஜனனி-யாஷிகா இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

 

தொடர்ந்து சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா கடைசிப்படியில் நிற்கிறார். இதைப்பார்க்கும் சக போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்கின்றனர்.

 

அதற்கு, ''என்னோட தகுதி இதுதான்.உங்க லைஃப் வேற என் லைஃப் வேற,'' என சொல்லிவிட்டு ஐஸ் அந்த இடத்தை விட்டு அகல்வது போல காட்சிகள் உள்ளன. இதனை வைத்துப்பார்க்கும் போது இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல்வேறு சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.