'உங்கள் நண்பர்களை சார்ந்து இருக்காதீர்கள்'.. முன்னாள் போட்டியாளர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 19, 2018 04:48 PM
Don\'t depend on your Friends says Gayathri Raghuramm

பிக்பாஸ் நிகழ்ச்சி 93 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தில் இருப்பதால் போட்டிகள்  மிகக்கடுமையாக உள்ளன.இதனால் பைனலுக்கு செல்லப்போகும் அந்த போட்டியாளர் யார்? என்பதை அறிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில், டான்ஸ் மாஸ்டரும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் உங்கள் நண்பர்களை சார்ந்து இருக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எல்லோருடைய சிரித்த முகங்களைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. கேர்ள்ஸ் எந்த டாஸ்க்கையும் விட்டுவிட வேண்டாம்.விளையாட்டை நேர்மையாக விளையாடுங்கள்.உங்களுக்காக விளையாடுங்கள்.உங்கள் நண்பர்களை சார்ந்து இருக்காதீர்கள்,'' என தெரிவித்துள்ளார்.