பிக்பாஸ் பயந்துட்டாரா?.. முன்னாள் போட்டியாளர் கேள்வி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 21, 2018 09:53 PM
Actress Harathi tweets about Biggboss Tamil

தற்போது பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐஸ்-விஜி மற்றும் யாஷிகா உள்ளிட்டோர் ஆவேசமாக விளையாடுவதால் பிக்பாஸ் வீடு ரத்தக்களமாகக் காட்சியளிக்கிறது.

 

விஜியைப் பிடித்து யாஷிகா தள்ள மறுபுறம் ஜனனிக்கு அடிபட்டு கைத்தாங்கலாக நடந்து போகிறார்.இதனைப் பார்க்கும் ரசிகர்கள் இது பிக்பாஸ் ஹவுஸா? இல்ல பைட் ஹவுஸா? என கேள்வி எழுப்புகின்றனர். டாஸ்க்கின் போது ஏகப்பட்ட அடிதடிகள் ஏற்பட்டதால் பிக்பாஸ் பஸ்ஸர் அடித்து டாஸ்க்கை ஒருவழியாக நிறுத்தி வைத்தார். 

 

இந்தநிலையில் நடிகையும், முன்னாள் போட்டியாளருமான ஆர்த்தி, அடிச்சாரு பாரு பஸ்ஸர். பிக்பாஸ் பயந்துட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.இதனைப்பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் மட்டுமில்ல நாங்களும் பயந்துட்டோம்,'' என தெரிவித்துள்ளனர்.