'மும்தாஜ் அம்மா மாதிரி'.. நீங்க நிஜமா கண்ணீர் விட்டீங்க-கமல் பாராட்டு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 23, 2018 11:01 PM
Yaashika Anand speech in front of KamalHaasan

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய யாஷிகா இன்று பார்வையாளர்கள் மற்றும் கமல் முன்னால் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

 

இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாரும் என்ன ஒரு மாதிரியா பார்த்தாங்க. 2 இல்லனா 3 வாரத்துல இங்க இருந்து போய்டுவேன்னு நெனச்சேன். ஆனா 98 நாள் இங்க இருந்து இருக்கேன். மும்தாஜ் என்ன ஒரு அம்மா மாதிரி பார்த்துக்கிட்டாங்க. ஐஸ் மாதிரி ஒரு பிரெண்ட் கெடைச்சா.

 

என்னோட வீட்ல ஒரு பையன் மாதிரி இருந்தேன். இங்க வந்து தான் எனக்குள்ள இருந்த பெண்ணை கண்டுபுடிச்சேன். ஒரே வீட்ல இருக்கும்போது ஈர்ப்பு வர்றது சகஜம் தான்.

 

ஐஸ் ஒரு குழந்தையா இருந்ததால நான் என்னோட குழந்தை தனத்தை விட்டுட்டேன். பொறக்கும்போது கூட நான் அழல. டாக்டர் என்ன ரொம்ப நேரம் தட்டிப் பார்த்தாங்களாம். எனக்கு பொதுவா முகத்துல எந்த உணர்ச்சியும் வராது.ஆனா இங்க வந்து நான் சிரிக்க, அழ எல்லாத்துக்கும் கத்துக்கிட்டேன்,'' என்றார்.

 

யாஷிகா பேசும்போது எந்த குறுக்கீடும் செய்யாமல் அமைதியாக இருந்த கமல், உங்க மெச்சூரிட்டி ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ஆனா இதேபோல எப்பவும் 30 வயசு மாதிரி இருக்காதீங்க என அட்வைஸ் செய்து வருத்தத்துடன் வழியனுப்பி வைத்தார்.