'நான் ஜெயிக்க மாட்டேன்மா'.. தனது அம்மாவிடம் நேரடியாக சொன்ன யாஷிகா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 23, 2018 09:52 PM
Biggboss Tamil: Yaashika Anand talks about her eviction

இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரையும் கமல் அவர்களின் உறவினர்களுடன் உரையாட சொன்னார்.

 

இதில் யாஷிகா தனது அம்மாவிடம் பேசினார். அப்போது,'' சேலையில நான் எப்படி இருக்கேன் அம்மா என கேட்டார். பதிலுக்கு அவரது அம்மா நீ சேலையில் நல்லா இருக்க. மேக்கப் இல்லாம நல்லா இருக்க என்றார். தொடர்ந்து நான் ஜெயிக்க மாட்டேன்மா என யாஷிகா சொல்ல அவரது அம்மா ஜெயிக்கிறது-தோக்கறது முக்கியம் இல்ல நீ நல்லா வெளையாடின என்று ஆறுதல் சொன்னார்.  

 

தொடர்ந்து யாஷிகாவிடம் பேசிய கமல் நீங்க உங்க அம்மாவிடம் ரொம்ப சாதாரணமா பேசினீங்க என்று சொல்ல, ஆமாம் சார் நானும் என் என் அம்மாவும் பிரண்ட்ஸ் போல என்று யாஷிகா சொன்னார்.

 

மேலும் யாஷிகா அம்மா போலவே கமலும் சேலையில் யாஷிகா நன்றாக இருப்பதாக வாழ்த்தினார். கமலின் இந்த கருத்தை பார்வையாளர்களும் கைதட்டி பாராட்டினர்.