'ஒவ்வொரு முறையும் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றனர்'.. யாஷிகா குறித்து நடிகை உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 24, 2018 12:07 AM
Vijay TV has disappointed me many a times: Sri Priya

பிக்பாஸ் வீட்டைவிட்டு யாஷிகா வெளியேறியது நிறைய பேருக்கு அதிர்ச்சியாக உள்ளது. அந்த வரிசையில் நடிகை ஸ்ரீபிரியாவும் இணைந்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,'' ஒவ்வொரு முறையும் விஜய் டிவி எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் இருவரும் சூப்பர் சிங்கரில் இருந்து டைட்டில் வெல்லாமல் வெளியேறியபோது ஏமாற்றமாக இருந்தது. இப்போது யாஷிகா வெளியேற்றமும் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது,'' என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு ட்வீட்டில்,'' யாஷிகா வெளியேற்றத்தினை எதிர்பார்க்கவில்லை. அவள் ஒரு நேர்மையான குழந்தை. குட்லக் கேர்ள்,'' என வாழ்த்தியிருக்கிறார்.