மனமுடைந்து ஒருநாள் இரவு முழுதும் அழுத விஜய்.. எதற்காக அழுதார் தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 26, 2018 11:56 AM
Actor Sanjeev talks about Vijay\'s growth

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் ஒரு இரவு முழுவதும் அழுத விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

 

நடிகரும்,விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான சஞ்சீவ் சமீபத்தில் நமக்கு அளித்த பேட்டியில் பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் விஜய் அழுத சம்பவத்தையும் அதற்கான காரணத்தையும் வருத்தத்துடன் அவர் பகிர்ந்துள்ளார்.

 

விஜய் குறித்து சஞ்சீவ் கூறுகையில்,'' விஜய் நடிக்க வந்த புதிதில் அவரைப்பற்றி தகர டப்பா மூஞ்சி என முன்னணி நாளிதழ் ஒன்று விமர்சனம் செய்தது. அதனைப்பார்த்த விஜய் ஒருநாள் இரவு முழுவதும் அழுதான். கிறிஸ்துமஸ் இரவா? இல்லை நியூ இயர் இரவா? என்பது சரியாக ஞாபகம் இல்லை. ஆனால் அன்று இரவு முழுவதும் அவன் அழுதான்.

 

அன்று விஜய்க்கு 20 வயதுதான். இப்போது இருக்கும் விஜய்யாக இருந்தால் அதனை அவர் கையாண்டிருக்கும் விதமே வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் அதே விஜய் தன்னை நிரூபித்த பின்னர், தகர டப்பா மூஞ்சி என எழுதிய அந்த நாளிதழே கவர் ஸ்டோரிக்காக விஜய்யை அணுகியது. கவர் போட்டோவுக்கு விஜய் போட்டோ வேணும் ஸ்டில் குடுங்க என அதே நாளிதழை கேட்கவைத்து, அதுக்கு பிறகு தான் குடுத்தான்,'' என விஜய் குறித்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.