'நடுவானில் கதவைத்திறந்து'.. சக பயணிகளுக்கு மரண பயத்தைக் காட்டிய நபர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 26, 2018 11:37 AM
Go Air passenger tried to open exit door instead of opening bathroom

விமான பயணங்களில் நிகழும் சிறு தவறும் பெரிய விபத்திற்கு காரணமாக அமைந்து விடும்.அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண பயத்தை காட்டியிருக்கிறார் பயணி ஒருவர்.

 

நேற்று டெல்லியில் இருந்து அஜ்மீருக்கு கோ ஏர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது.விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பயணி ஒருவர் கழிவறைக்கு செல்வதற்காக எழுந்து சென்றார்.ஆனால் அவர் கழிவறைக்கு செல்வதற்கு பதிலாக விமானத்திலிருந்து வெளியே செல்லும் கதவை பிடித்து இழுத்துள்ளார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த  மற்ற பயணிகள் சுதாரித்து கொண்டு அந்த நபரை தடுத்து நிறுத்தியதோடு அவரை விமான பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.இதனால் விமானத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவானது.

 

இதுகுறித்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.விமானம் தரையிறங்கிய உடன் அந்த நபர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் (CISF) ஒப்படைக்கப்பட்டார்.

 

அவர்கள் அந்த நபரிடம் நீண்ட நேரம் விசாரணை மேற்கொண்டார்கள். விசாரணையில் அவர் இப்போதுதான் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார் என்பது தெரியவந்தது.இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.இதனால் பாட்னா விமானநிலையமே சற்றுநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : #FLIGHT #NEW DELHI #PATNA #GOAIR FLIGHT