விமானத்தில் ப்ரோபஸல்.. ஏற்றுக்கொண்ட பணிப்பெண்ணின் நிலை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 19, 2018 11:09 AM
Air hostess fired for accepting proposal during flight

காதலைச் சொல்வதற்கென்று பிரத்தியேகமான இடங்கள் உண்டு. பறந்து பறந்து காதலைச் சொல்வது என்பது இதுதானா என்பதுபோல் அண்மையில் விமானத்தில் நிகழ்ந்த லவ் ப்ரொபோசல் சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒரு அழகான பெண்ணிடம் காதலைச் சொல்வதற்காக சினிமாவில் பூக்கள் நிறைந்த பகுதிகள், மலை உச்சி, பனிப்பொழியும் மாலை, குளிர் பிரதேசத்தில் மூட்டப்பட்ட சுள்ளித் தீ முன்னால் கித்தார் வாசித்தபடி என பல விதமாக காதலைச் சொல்வது வழக்கம்.

 

பார்த்த மாத்திரத்திலேயே காதலைச் சொல்வது இதில் இன்னும் சற்று தயக்கமான காரியம். ’அந்த கடவுளை விடவும் பெரியவன் என்று பூமியில் உள்ளவன் எவன்- பெண் கண்களை பார்த்து காதலைச் சொல்லும் தைரியம் உள்ளவன் அவன்’ என்று கூறிய வைரமுத்துவின் சொற்களுக்கேற்ப, சீனாவில் விமான பணிப்பெண் ஒருவருக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்தபடி, தன் காதலை ஒருவர் ப்ரொபோஸ் செய்யும் வீடியோ சீனா தொடங்கி உலகம் முழுவதும் வைரல் ஆகியுள்ளது.

 

இதில் காதலை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதால், அந்த பணிப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் என்னவென்றால், ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தில் பணிபுரிந்த இவர் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உபசரிப்பில் கவனக்குறைவாக இருந்ததால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Tags : #FLIGHT #PROPOSAL #AIR HOSTESS #CHINA #LOVE