பாலாஜி மேல 'குப்பை கொட்டினது' ரொம்ப கஷ்டமா இருக்கு

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 25, 2018 09:57 AM
Biggboss Tamil: September 25th Promo Video 1

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 தினங்களே இருப்பதால் வெற்றிவாகை சூடப்போகும் அந்த ஒரு நபர் யார்? என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால் வீட்டைவிட்டு வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து செல்கின்றனர். அந்தவகையில் இன்று ஷாரிக் மற்றும் நித்யா இருவரும் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

 

இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் நித்யா பேசும்போது,'' பாலாஜி தலையில ஐஸ் குப்பை கொட்டினது ரொம்ப ஹர்ட்டிங்கா இருந்தது. அவங்க குப்பை கொட்டும்போது ஹவுஸ்மேட்ஸ் யாரும் தடுக்கல. எல்லாரும் அங்கங்க ஓரமா நின்னுட்டு இருந்தாங்க. ஏன் யாருமே தடுக்கல,'' என்று ஆதங்கத்துடன் கேட்பது போல காட்சிகள் உள்ளன. 

 

இதனால் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் மனவருத்தங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.