விஜி,ரித்விகா,ஜனனி.. இந்த மூவரில் ஒருவருக்குத்தான் டைட்டில்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 25, 2018 06:12 PM
Actress Harathi tweets about Biggboss Title Winner

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 தினங்களே இருப்பதால் வெற்றிவாகை சூடப்போகும் அந்த ஒரு நபர் யார்? என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில் நடிகையும்,முன்னாள் போட்டியாளருமான நடிகை ஆரத்தி பிக்பாஸ் டைட்டில் வின்னர் குறித்த தனது கருத்தினை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

இதுகுறித்து அவர்,'' மக்கள் விருது-மும்தாஜ்க்கும், அப்பாவி விருது-சென்றாயனுக்கும் கொடுக்கலாம். பிக்பாஸ் டைட்டில் வின்னர் விருது விஜயலட்சுமி,அல்லது ரித்து அல்லது ஜனனி ஐயருக்கு கொடுக்கலாம். போலி விருது-ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

 

மற்றொரு ட்வீட்டில்,'' நம் தமிழ்  பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம்!,'' என தெரிவித்துள்ளார்.

 

 

 

ஆர்த்தியின் இந்த ட்வீட்டுகள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.