'மீண்டும், மீண்டும் முட்டாளாக்கப்படுகிறோம்'.. விலகியிருப்பது நமக்கு நல்லது!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 25, 2018 04:50 PM
Actress Kaajal Pasupathi tweets about Biggboss Show

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 தினங்களே இருப்பதால் வெற்றிவாகை சூடப்போகும் அந்த ஒரு நபர் யார்? என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

 

இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால் வீட்டைவிட்டு வெளியில் சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து செல்கின்றனர். அந்தவகையில் இன்று ஷாரிக் மற்றும் நித்யா இருவரும் வீட்டுக்குள் வந்துள்ளனர்.

 

இந்தநிலையில் நடிகையும்,முன்னாள் போட்டியாளருமான காஜல் பசுபதி பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், '' இதற்கு மேல் ஓட்டுப்போடுவதில் அர்த்தம் இல்லை.நாம் மீண்டும்,மீண்டும் முட்டாளாக்கப்படுகிறோம். ஏமாறுறவங்க இருக்குறவரை ஏமாத்துறவங்க இருக்க தான் செய்வாங்க.நம்புனது நம்ப தப்பு தான். இதற்கு மேல் இந்த ஷோவில் இருந்து விலகியிருப்பது நல்லது. அட போங்கய்யா,'' என தெரிவித்துள்ளார்.