வாசிக்கப்போகும் முன், ’செய்தியாளர்’ செய்த காரியம்..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 25, 2018 04:47 PM
Pakistani news reader ‘flips the bird’ on air video goes viral

செய்தி வாசித்துக்கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், விரல்களை flipping the bird முறையில் நடுவிரலைக் காண்பித்து சிரித்துக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


பாகிஸ்தானின் சாமா டிவி ஆசிய கோப்பை போட்டியை பற்றிய செய்தியைக் கூறிக்கொண்டிருக்கையில், ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் வென்றுவிட்டது. இந்த செய்தி ஸ்க்ரோலிங்கில் வந்ததை கொண்டாடும் விதமாக செய்தி வாசிக்கத் தொடங்கும் முன், செய்தியாளர் உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்று செய்துள்ளார்.  இந்த வீடியோவை சையது ராஸா மெஹ்டி என்னும் பத்திரிகையாளர் தன் இணையத்தில் பதிவிட்டு, ’ஜர்னலிஸத்துக்கு இரங்கல்கள்’  என்று விமர்சித்துள்ளார். இதனை தொடர்ந்து பலரும் இந்த செயலை விமர்சித்து வருகின்றனர். 


ஆனால் முந்தைய போட்டி ஒன்றின்போது, விளையாட்டு அரங்கத்தில் இருந்த ஒரு சிறுவன் இதுபோன்று நடுவிரலைக் காட்டி பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடிய புகைப்படம் வைரலானது. அதனை நினைவூட்டும் வகையில்தான் இந்த செய்தியாளர் இவ்வாறு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #ASIACUP2018 #PAKISTAN #NEWSCHANNEL #NEWSREADER #NEWSANCHOR #FLIPPING THE BIRD