மைதானத்தில் சுருண்டு விழுந்த ஹர்திக் பாண்டியா.. தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 20, 2018 10:58 AM
INDVSPAK: Hardik Pandya sustains back injury

ஆசிய கோப்பை விளையாட்டு போட்டிகள் தற்போது துபாயில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.இதில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

போட்டியின்போது 18-வது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா முதுகுவலியால் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை ஸ்டெர்ச்சரில் அழைத்து சென்றனர். அவருக்குப் பதிலாக மனீஷ் பாண்டே பீல்டிங் செய்தார்.

 

இந்தநிலையில் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில்,'' ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். அவரால் எழுந்து நிற்க முடிகிறது,'' என தெரிவித்துள்ளது.

 

இனிவரும் போட்டிகளில் ஹர்திக் பங்கேற்பாரா? என்பது குறித்து இதுவரை எந்த தகவல்களும் வெளியாகவில்லை.