'போஸ்மார்ட்டம் செய்வதை விட'... கோலிக்கு அட்வைஸ் செய்த தாதா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 13, 2018 10:49 PM
ENGVSIND: Ganguly advice for Kohli after the England test series

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இழந்தது. இது குறித்து ரசிகர்களும், விமர்சகர்களும் கடுமையாக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியும், கோலிக்கு அட்வைஸ் செய்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ''போஸ்ட்மார்ட்டம் செய்வதை விட, திறமைகளை அங்கீகரிப்பதே இப்போது முக்கியம்.கோலி வீரர்களிடமிருந்து சிறப்பான திறமைகளை வெளியே கொண்டு வரவேண்டும். இது கேப்டனின் பொறுப்பாகும்.

 

ஒரு கேப்டனாகப்பட்டவர் வீரர்களின் தோள்மேல் கைபோட்டு அரவணைத்து தனக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருமாறு பேச வேண்டும். இது நடந்தால் ஆட்டத்திறன் தானாகவே மேம்படும்,'' என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.