அனைத்து போட்டிகளிலும் இருந்து 'ஓய்வு' பெறுகிறேன்.. பிரபல வீரர் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 05, 2018 03:11 PM
Former India pacer RP Singh announces retirement from cricket

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த இந்திய வீரர் ஆர்.பி.சிங்  ஓய்வு பெறுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆர்.பி.சிங். இந்திய அணியில் கடந்த 2005-ம் ஆண்டு தேர்வான ஆர்.பி.சிங், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.இந்நிலையில் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்து ட்விட்டரில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

நான் இன்றுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். 13 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி நான் இந்திய அணிக்காக முதன்முதலில் விளையாடத் தொடங்கினேன்.என் வாழ்வில் எப்போதும் நினைவில் இருப்பது, ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் விளையாடினேன். அப்போது, இங்கிலாந்துக்கு எதிராக 1-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றினோம். வெற்றி பெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் நான் 117 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதை என்னால் மறக்க முடியாது.

 

என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்காக, விமர்சனம் செய்தவர்களுக்காக, பாராட்டியவர்களுக்காக, என்னுடன் கடினமான காலகட்டத்தில் உடன் இருந்தவர்களுக்காக நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இனிமையாகவும், மறக்கமுடியாத நினைவுகள் கொண்டதாகவும் இருக்க உதவிய அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்கிறேன்.இவ்வாறு ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.

 

டிராவிட்  தலைமையில் இந்திய அணி கடந்த 2007-ம் ஆண்டு இங்கிலாந்து சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்று கணக்கில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. அதில் வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்.பி.சிங் வெற்றிக்கியக் காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET